Skip to main content

அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என தனது நிர்வாகம் வலியுறுத்துவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்!

Aug 14, 2020 286 views Posted By : YarlSri TV
Image

அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என தனது நிர்வாகம் வலியுறுத்துவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்! 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று மாஸ்க் அணிதல். 



மாஸ்க் அணிவதின் மூலம் கொரோனா பரவலை வெகுவாக குறைக்கலாம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பல நாடுகள் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.



ஆனால், கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.



அமெரிக்கர்கள் மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்துவந்தாலும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றையும் அவர் வெளியிடவில்லை.



மாஸ்க் அணிய உத்தரவிடும் உரிமை மாகாண கவர்னர்களிடம் உள்ளதாகவும், கவர்னர்கள் அந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனவும், அந்த சுதந்திரத்தில் தான் தலையிட விரும்பவில்லை எனவும் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார். 



இதனால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படாமல் உள்ளது. இதனால் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



இந்நிலையில், வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என எனது நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. 



மாஸ்க் அணிவது தேசப்பற்று மிக்க செயல். மாஸ்க் அணிவது மிகவும் நன்றாக இருக்கலாம், நன்றாக இருக்கலாம், அல்லது நன்றாக இல்லாமல் கூட இருக்கலாம். இதனால் நீங்கள் இழக்கப்போவது என்ன?. ஆனால், மீண்டும் கூறுகிறேன் மாஸ்க் அணிய உத்தரவிடுவது தொடர்பான முடிவுகளை கவர்னர்களை தான் எடுக்க வேண்டும். இதில் குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும்(மாகாண ஆட்சி, கூட்டாட்சி முறை இடையே)’ என தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை