Skip to main content

துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கூறியிருப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது!

Aug 14, 2020 295 views Posted By : YarlSri TV
Image

துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கூறியிருப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது! 

'அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கூறியிருப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.



வரும், சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை, அக்கட்சியில் எழுந்துள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:



தொடர்ந்து, மூன்றாவது முறையாக, 2021 சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே, அ.தி.மு.க.,வின் இலக்கு.அதுவே, ஜெயலலிதாவின் கனவு. அதை நனவாக்க, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது, என் அன்பு வேண்டுகோள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர்வழி சென்றால், நாளை நமதே. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



வழக்கமாக, இதுபோன்ற விவகாரங்களில், முதல்வர் இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து, கூட்டறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரத்தில் மட்டும், துணை முதல்வர், தனிப்பட்ட முறையில், தானாக முன்வந்து, இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.



இது, ஏற்கனவே மூன்று முறை முதல்வர் பதவி வகித்த, பன்னீர்செல்வம், அடுத்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், விட்டுத் தரப்போவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தொடர்ந்து மவுனம் சாதிப்பது, நான்கு ஆண்டுகளாக, ஆட்சி அதிகாரத்தை கட்டிக்காத்த தனக்கு தான், அடுத்த முறையும், அந்த நாற்காலி தரப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளதா என்ற, கேள்வியை எழுப்பியிருக்கிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை