Skip to main content

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி!

Aug 14, 2020 335 views Posted By : YarlSri TV
Image

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி! 

வாஷிங்டன்: பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதாக தவகல் வெளியாகியுள்ளன.



இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரசு நாடுகளும கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ.



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்கவும் தூதரங்களை ஏற்படுத்வும் ஒப்புக்கொண்டுள்ளன. 'வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு மத்திய கிழக்கில் அமைதிக்கு முன்னேற்றும்' என அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், நெத்தன் யாகூ, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது அல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு கரை பகுதியில் ஆக்கிரமிப்பு' நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. .இன்னும் சில நாட்களில் இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளது.இந்த அமைதி ஒப்பந்தத்திற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம் இது 'துரோகச்செயல்'என குற்றஞ்சாட்டியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை