Skip to main content

தலைவனுக்கு" பாடலை வெளியிட்ட சினேகன்..!

Aug 14, 2020 290 views Posted By : YarlSri TV
Image

தலைவனுக்கு" பாடலை வெளியிட்ட சினேகன்..! 

12 ஆகஸ்ட் 1959ம் ஆண்டு வெளியானது களத்தூர் கண்ணம்மா என்ற படம், அந்த படத்தில் ஒரு ஏழை சிறுவனாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஒரு புதிய நாயகன். அப்போது அந்த குழந்தை நட்சத்திரத்தின் வயதோ ஐந்து. காலம் கடந்தது படங்கள் பல கண்டார். நடன அமைப்பாளராக, இசை அமைப்பாளராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, ஸ்டண்ட் கலைஞராக, தயாரிப்பாளராக, ஒளிப்பதிவாளராக இன்னும் சொல்லப்போனால் சினிமாவே இவராக வாழ்ந்து வரும் ஒரு அதிசய மனிதன் தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் என்ற ரசிகரால் உலக நாயகன் என்று போற்றப்பட திரு. கமல்ஹாசன். 



கமல்ஹாசன்.. அவர் கலைத்தாயின் அன்பு குழந்தை, திரையுலகில் எனது அண்ணன்.. இவ்வாறு கூறியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னும் ஆயிரம் ஆயிரம் திரையுலக பிரம்மாக்கள் இவரை வியந்து புகழ்ந்தது உண்டு. இவர் பெறாத விருதுகள் திரையுலகில் இல்லை என்றால் அது மிகையல்ல. சத்யா, மைக்கேல் மதன காமராஜன், புன்னகை மன்னன், அவ்வை ஷண்முகி தொடங்கி உத்தம வில்லன் மற்றும் தசாவதாரம் வரை இவருடைய பல்சுவை படங்கள் இன்னும் பல நுறு வருடங்களுக்கு இவர் புகழ் பேசும். 



இந்நிலையில் நேற்று கமல் அவர்கள் திரையுலகில் தனது 61ம் ஆண்டில் கால்பதித்ததை முன்னிட்டு பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பிரபல நடிகரும் பாடலாசிரியருமான திரு. சினேகன் "கலைஞனின் தலைவனுக்கு" என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை