Skip to main content

ஆண்டி என்றாலும் ஓகே தான்... அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா!

Aug 17, 2020 307 views Posted By : YarlSri TV
Image

ஆண்டி என்றாலும் ஓகே தான்... அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா! 

ஆண்டி என்றாலும் ஓகே தான்... அதிபர் என்றாலும் ஓகே தான்" என்கிறார் நித்யானந்தா.. இதுக்கு சிரிப்பதா, கொந்தளிப்பதா என தெரியவில்லை.



கொரோனா தன்மை அதிகரித்ததால், இந்த 3 மாசமாக அவ்வளவாக சத்தமில்லாமல் இருந்த நித்தியானந்தா, இப்பதான் பழைய மாதிரி வெளியே வந்திருக்கிறார்…



புதுசா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவுக்கே ஷாக் தந்தார். "கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது..



உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன்.



ரிசர்வ் வங்கி



வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின்படியே தொடங்கப்பட்டுள்ளது.



சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது.. வரப்போகிற விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பையும் வெளியிட போகிறேன்" என்றார்.



போலீஸ்



எதுக்காக தலைமறைவாக இருக்கிறோம், எதுக்காக போலீசார் தம்மை தேடி கொண்டிருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல், சட்டத்துக்கு புறம்பாக எதுவும் இருக்காது என்று நித்யானந்தா சொல்வதை எப்படி எடுத்து கொள்வது?





கைது?



ஒரு நாட்டை தனி மனிதனால் எப்படி உருவாக்க முடியும்? இது சாத்தியமா? பொருளாதார கொள்கையை யார் வெளியிட முடியும்? அப்படியென்றால் இவரை கைது செய்யவே முடியாதா என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் நமக்கு எழுந்தபடியே இருக்கின்றன..



இவைகளுக்கே இன்னும் பதில் தெரியாத நிலையில், இன்னொரு வீடியோ வந்துள்ளது. அதாவது விக்கிபீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்யானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம்.



இளசுகள் அதில், "தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான்.. அதிபர் என்றாலும் ஓகே தான்" என்ற ஒரு வார்த்தையை சொல்லி உள்ளார்.



இளசுகள்



இவரது ஒவ்வொரு வாக்கியத்தையும் சும்மாவே வைரலாக்கிவிடுவார்கள்.. இப்போது இந்த வரிகள்தான் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது..



அவரது புது அறிவிப்பு எப்படி இருக்க போகிறதோ என்ற அதிர்ச்சி ஒரு பக்கம் நமக்கு இருந்தாலும், இந்த வரிகளை இணையவாசிகள் ரசித்து வருகிறார்கள்







 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை