Skip to main content

த.தே.கூ.தேசிய பட்டியல் நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

Aug 17, 2020 252 views Posted By : YarlSri TV
Image

த.தே.கூ.தேசிய பட்டியல் நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை! 

த.தே.கூ.தேசிய பட்டியல் நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை



தீர்மானம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் இருப்பினும் அந்த நியமனம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்மந்தமாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேலும் பரிசீலனை செய்யும் என த. தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



நேற்று முன்தினம் 15ம் திகதி இலங்கை தமிழசுக் அரசியல் குழு கூட்டம் திருகோணமலையில் உள்ள இரா.சம்மந்தனின் இல்லத்தில் இடம் பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்மந்தன் இவ்வாறு தெரிவித்தார்.



இக் கூட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர்களான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ.சுமந்திரன், சிறிதரன் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , உட்பட பலர்அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் இதன் போது விவாதிக்கப்பட்டது. அனைவரின் கருத்துக்களையும் நாம் கேட்டறிந்து கொண்டோம்.



அதே வேளை இலங்கை தமிழரசு கட்சியினால் நியமனம் செய்யப்பட்ட தேசியப பட்டியல் தொடரபாகவும் ஆராயப்பட்டது. வழங்கப்பட்ட நியமனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தீர்மானிக்கப்பட்டது.



நியமனம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்மந்தமாக எதிர்வரும் இம்மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் வவுனியாவில் கூடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேலும் பரிசீலனை செய்யும் என இரா.சம்பந்தன் இதன் போது தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை