Skip to main content

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு!

Aug 16, 2020 344 views Posted By : YarlSri TV
Image

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு! 

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்துக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.



தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் மாலை 7.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரும் 21-ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக கோயில் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெய் அபிஷேகம், படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை