Skip to main content

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!

Aug 16, 2020 275 views Posted By : YarlSri TV
Image

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்! 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் கமல் ஹாசன் பதில் அளித்தார்.



அதில் ஒரு நிர்வாகி, தமிழகத்தில் திமுக, அதிமுகவை தாண்டி வெற்றி பெற முடியுமா? அல்லது அவர்களுடன் கூட்டணிக்கு செல்வீர்களா என்ற கேள்வியை எழுப்பினார்.



இதற்கு பதில் அளித்த கமல் ஹாசன், “அரசியல் கட்சிகளை எல்லாம் சிந்தனையின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்க வேண்டும்.



அவர்களை பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்? மக்கள் நீதி மய்யம் என்பதேகூட கூட்டணிதான்.



வெவ்வேறு துறைகளில் இருந்தவர்கள், வெவ்வேறு கட்சிகளில் இருந்தவர்கள்கூட விலகி இங்கே வந்திருக்கிறார்கள்.



திமுகவுடன் கூட்டணி என்றால் இல்லைதான். ஆனால், நாம் கூடிதாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்தது என்றால் அதைச் செய்வோம்.



ஆனால், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். அந்த இலக்கை அடைந்த பிறகு நம்முடைய இடத்துக்கு சென்றுவிட வேண்டும்.



மாற்றத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அதிமுக, திமுகவுடன் சேர்வீர்களா என்கிறார்கள்.



அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் என்ன ஏற்படும் என்பதை யோசித்துதான் தனிக்கட்சி தொடங்கினோம்.



தமிழகத்தில் ஒருத்தவரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்னுடைய எண்ணம்.” என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை