Skip to main content

இளைஞர்களின் முயற்சியில் பிளாஸ்டிக் கழிவுகளற்ற_யாழ்ப்பாணம்!

Aug 15, 2020 290 views Posted By : YarlSri TV
Image

இளைஞர்களின் முயற்சியில் பிளாஸ்டிக் கழிவுகளற்ற_யாழ்ப்பாணம்! 

வலிகாமம் வடக்கைச்சேர்ந்த ,"விதையனைத்தும் விருட்சமே" அமைப்பின் இளைஞர்களின் முயற்சியில்



பிளாஸ்டிக் கழிவுகளற்ற_யாழ்ப்பாணத்தை நோக்கிய என்ற தொனிப்பொருளிலான  பயணத்தில் முதல் கட்டமாக கைதடி_சந்தியில் இருந்து சாவகச்சேரி வரை வீதியில் வீசப்படிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சமூகப்பணி நிறைவுறுத்தப்பட்டுள்ளது



இளைஞர்களின் பேராதரவுடன் சுமார்5மணித்தியாலயங்களாக நடைபெற்று நிறைபெற்றது . 



கைதடிச்சந்திக்கும்_சாவகச்சேரிக்குமிடையில்_மட்டும் சுமார்_150_ மூட்டை பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டது 



மக்கள்  பாவித்து எறியும் பிளாஸ்டிக்_கழிவுகளால் குப்பைக்கூடமாக மாறிவருகின்றது யாழ்ப்பாணம்.



பிளாஸ்டிக் கழிவுகளை ஒழுங்கான முறையில் மீள்சுழற்சிக்கு அனுப்புவதுடன் நாங்கள் இதுவரைக்கும் எறிந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுப்பதும் அனைவரினதும் கடமையாகும்



பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் அற்ற யாழ்ப்பாணமாக உருவாக்குவோம் என்ற பயணம் அனைவரது பங்களிப்புடனும் தொடர்ந்து இடம்பெறும் என விதையனைத்தும் விருட்சமே அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை