Skip to main content

காயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்!

Jul 09, 2020 293 views Posted By : YarlSri TV
Image

காயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்! 

டத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருந்த இவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



ஆனால், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது

தகவலறிந்த பிரதமர் நள்ளிரவில் நிலைமை குறித்து விசாரித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் பாதுகாப்புப்படையின் தோல்வியினை காட்டுகின்றது



ஷேக் வாசிமுக்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது ஒருவரும் அவருடன் இல்லை. இந்நிலையில் கடமையை தவறியதற்காக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.



தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த கொலையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், "பாண்டிபோராவில் இளம் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது சகோதரர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர்களுக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். என ராம் மாதவ் டிவிட் செய்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை