Skip to main content

நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது!

Jul 03, 2020 372 views Posted By : YarlSri TV
Image

நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது! 

சீனா கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லும் ஹாங்காங்காரர்களுக்கு பிரிட்டன் இடம் கொடுத்தால், அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது.



அதனால் ஏற்படும் அனைத்து எதிர்விளைவுகளையும் சந்திக்க பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.



சீனா கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிட்டனுடனான ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளதால் சுமார் மூன்று மில்லியன் ஹாங்காங் வாசிகளுக்கு பிரிட்டனில் குடியேற அனுமதி அளிக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.



இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “ஹாங்காங்காரர்களுக்கு பிரிட்டன் இடம் கொடுப்பதை சீனா வன்மையாக கண்டிக்கிறது.



“அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. பிரிட்டன் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்,” என்றார்.



இதற்கிடையே, ஹாங்காங் தொடர்பான தடைகளுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.



இது சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் செய்யும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்கிறது.



இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்களில் 10 பேர் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை