Skip to main content

ஆக்சிஜன் வாங்கும் மக்கள் - கவலையை ஏற்படுத்தும் ’இந்த’ செயல்!

Jun 29, 2020 294 views Posted By : YarlSri TV
Image

ஆக்சிஜன் வாங்கும் மக்கள் - கவலையை ஏற்படுத்தும் ’இந்த’ செயல்! 

சார்ஸ், எபோலா அளவிற்கு கொரோனா வைரஸ் பெரும் உயிர்க்கொல்லி நோயல்ல என்றபோதிலும் கவனிக்காமல் விட்டால் நுரையீரலை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிர்ப்பலி வாங்கி விடுகிறது. உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர். உடலில் ஆக்சிஜன் அளவைக் காட்டும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளை மக்கள் வாங்கத் தொடங்கியிருப்பது அவர்களிடம் கொரோனா பற்றியே புரிதல் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.



அதேநேரத்தில், நிரம்பி வழியம் அரசு மருத்துவமனைகள், லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் இடம் கிடைக்காத தனியார் மருத்துவமனைகள், மணிக்கொருமுறை தெருக்களில் அலறும் 108 ஆம்புலன்சுகள் என மருத்துவ கட்டமைப்புகள் தடுமாறுவதை பார்த்து விவரம் அறிந்த பெருநகரவாசிகள் பலர் ஆக்சிமீட்டரையும் தாண்டி, உயிர்காக்கும் ஆக்சிஜன் உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.



கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு முதலில் ஆக்சிஜனையே சுவாசிக்கச் செய்து மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுகின்றனர். அந்த செயற்கை ஆக்சிஜனை, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவிகள் மூலம் வீட்டிலேயே பெறமுடியும் என்பதால் அவற்றை பலரும் போட்டி போட்டு வாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.



மாஸ்க் உடன் இணைந்த ஆக்சிஜன் சிலிண்டர், பெரிய மருந்தகங்களில் கிடைக்கின்றன. கொரோனா காலத்துக்கு முன்பு 10 லிட்டர் சிலிண்டர் 6,500 ரூபாய்க்கு விற்றதுபோய், தற்போது 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஆக்சிஜனை நேரடியாக சுவாசிக்க உதவும் சிலிண்டர்களுக்கு மாற்று, ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவிகள் ஆகும். ஆக்சிஜன் சிலிண்டர்களைப் போல் கான்சன்டிரேட்டர் கருவிகளில், மீண்டும், மீண்டும் ஆக்சிஜனை நிரப்ப தேவையில்லை. பேட்டரி ஆயுள் நீடிக்கும் வரை, தேவையான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டே இருக்கலாம்.



இக்கருவி, சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்சிஜனை கவர்ந்து, அதை வடிகட்டி, டியூப் வழியாக நாசி துவாரத்துக்கு அனுப்பி சுவாசம் தடைபடாமல் பார்த்துக் கொள்கிறது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை