Skip to main content

கொரோனா பெயரில் நடக்கும் சைபர் மோசடிகள்: மத்திய அரசின் எச்சரிக்கை என்ன?

Jun 29, 2020 328 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பெயரில் நடக்கும் சைபர் மோசடிகள்: மத்திய அரசின் எச்சரிக்கை என்ன? 

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத்தில்தான் சைபர் மோசடிக் கும்பல்கள் துடிப்புடன் இயங்கிவருகின்றன. எப்போதையும்விட work from home-இல் நாம் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதால் இதுவே சரியான நேரம் என ஆர்வமாக காத்திருக்கின்றனர் மோசடி பேர்வழிகள். போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் எனப் பல வழிகளில் இந்த சைபர் மோசடிகள் நடக்கின்றன. 



மத்திய அரசின் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு அமைப்பான Indian Computer Emergency Response Team (CERT-In) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இந்தியாவில் பெருமளவில் சைபர் மோசடிகளை மேற்கொள்ள ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்த மோசடி என்பது போலி இ-மெயில்கள் மூலம் நடந்துவருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பெயரில், COVID -19 தடுப்புக்காக உதவி கேட்பது போல இந்த மெயில்கள் அனுப்பப்படலாம். இதில் வரும் லிங்க்கை கிளிக் செய்தால் அது உங்களை ஒரு போலி இணையதளத்திற்குக் கொண்டு செல்லும். அதில் மலிஷியஸ் வைரஸ்கள் உங்கள் சாதனங்களில் பதிவிறக்கப்படலாம் அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.



Free COVID-19 tests for all residents of Delhi, Mumbai, Hyderabad, Chennai and Ahmedabad" போன்ற தலைப்புகளுடன் இந்த மெயில்கள் வரும். எக்காரணத்திற்காகவும் அதில் இருக்கும் லிங்க்களை கிளிக் செய்துவிட வேண்டாம், தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்துவிட வேண்டாம். ncov2019@gov.in போன்று பார்க்க அதிகாரப்பூர்வமாக இருக்கும் மெயில் ஐடிகளே இந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் ஜூன் மாதம் முதல் நடந்துவருகிறது" என்கிறது அந்த அறிக்கை.



கொரோனா சோதனைகளின் பெயரில்  மோசடி மெயில்கள் வந்தால் உடனடியாக incident@cert-in.org.in என்ற மெயிலுக்கு ரிப்போர்ட் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை