Skip to main content

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக தொற்று பரவல் விகிதம் எவ்வளவு என்ற பட்டியலை அரசு நிபுணர் குழு உறுப்பினர் பிரப்தீப் கவுர் வெளியிட்டுள்ளார்!

Jun 29, 2020 325 views Posted By : YarlSri TV
Image

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக தொற்று பரவல் விகிதம் எவ்வளவு என்ற பட்டியலை அரசு நிபுணர் குழு உறுப்பினர் பிரப்தீப் கவுர் வெளியிட்டுள்ளார்! 

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தொற்று பரவல் விகிதம் 5 விழுக்காடுக்கு மேல் இருப்பதாக பிரப்தீப் கவுர் கூறியுள்ளார். இதில், அதிகபட்சமாக சென்னையில் பரிசோதனை செய்யும் ஒவ்வொரு 100 பேரில் 23 நபர்களுக்கு தொற்று கண்டறியப்படுகிறது.  இதன் மூலம் சென்னையில் தொற்று பரவல் விகிதம் 23 .1 விழுக்காடு உள்ளது.



திருவள்ளூரில் 21.3 சதவீதம், செங்கல்பட்டில் 18.1 சதவீதம், காஞ்சிபுரத்தில் 8.4 சதவீதம், அரியலூரில் 7.6 சதவீதமாக உள்ளது. அடுத்தபடியாக நெல்லை, திருவாரூர், திருப்பூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 4 முதல் 5 சதவீதம் உள்ளது.



13 மாவட்டங்களில் 1 முதல் 4 சதவீதம் உள்ள வைரஸ் பரவலானது, 14 மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.



மாநிலத்திலேயே குறைந்த அளவு தருமபுரியில் பதிவாகியுள்ளது. அங்கு 0.2 சதவீதமாக உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட மாவட்ட வாரியான பரிசோதனை எண்ணிக்கைகளை கொண்டு வைரஸ் பரவல் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை