Skip to main content

ராக்கெட்டின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மோமோ 5 ராக்கெட் செயலிழந்து கடலில் விழுந்தது.

Jun 15, 2020 337 views Posted By : YarlSri TV
Image

ராக்கெட்டின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மோமோ 5 ராக்கெட் செயலிழந்து கடலில் விழுந்தது. 

 ஜப்பானைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் ஜப்பான் அரசுடன் இணைந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த நிறுவனம் மோமோ என்ற பெயரில் புதிய ராக்கெட்டுகளை தயார் செய்து சோதித்து வருகிறது. இதுவரை நான்கு மோமோ ராக்கெட்டுகளை நிறுவனம் வெற்றிகரமாக சோதித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று வடக்கு பிராந்தியமான ஹோக்கைடாவில் மோமோ 5 ராக்கெட்டை நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தபோது ராக்கெட்டின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக மோமோ 5 ராக்கெட் செயலிழந்து அங்குள்ள கடலில் விழுந்தது. இதனால் மோமோ 5 ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை