Skip to main content

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Jun 15, 2020 312 views Posted By : YarlSri TV
Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 



சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்து 95 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை