Skip to main content

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயணம்... கமலா ஹரிஸ்க்கு திருப்புமுனையாக அமைந்த தருணம்!

Aug 13, 2020 280 views Posted By : YarlSri TV
Image

பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயணம்... கமலா ஹரிஸ்க்கு திருப்புமுனையாக அமைந்த தருணம்! 

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரீஸ், நம்ம ஊருக்கார பொண்ணு என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னைக்கும் - கமலா ஹாரீஸிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.



கமலா ஹாரீஸ் CNN-க்கு அளித்த பேட்டியில் சென்னைக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். தன்னுடைய தாய் தனக்கும், தனது சகோதரி மாயாவிற்கும் இந்திய பண்பாடு குறித்து கற்று கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா செல்லும் போதும் தன் வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் தாய் மற்றும் தனது தாத்தா பி.வி.கோபாலன் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.



இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்தியாவில் உள்ள கமலா ஹாரீஸின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை