Skip to main content

மிக குறைந்த கொரோனா இறப்பு விகிதத்தை பதிவு செய்த ரஷ்யா…!!

Aug 12, 2020 274 views Posted By : YarlSri TV
Image

மிக குறைந்த கொரோனா இறப்பு விகிதத்தை பதிவு செய்த ரஷ்யா…!! 

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு குறைந்த அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 945பேர் பாதிப்படைந்ததோடு, 130பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.இதுவே ஏப்ரல் 23ஆம் திகதிக்கு (4,774பேர்) பிறகு பதிவான பிறகு குறைந்த அளவிலான கொவிட்-19 பாதிப்பு ஆகும்.



கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 559பேர் பாதிப்படைந்துள்ளனர்.



மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 131ஆக உள்ளது.மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 79ஆயிரத்து 293பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து மூவாயிரத்து 175பேர் பூரண குணமடைந்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை