Skip to main content

இந்தியா உட்பட 20 நாடுகள் 100 கோடி தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தமாம்!

Aug 11, 2020 227 views Posted By : YarlSri TV
Image

இந்தியா உட்பட 20 நாடுகள் 100 கோடி தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தமாம்! 

தாம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் பயன்படுத்தும் வகையில் Sputnik V என பெயரிட்டிருக்கிறது ரஷ்யா. இந்த தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.



உலக நாடுகளை 8 மாதங்களாக ஆட்டிப் படைத்து பேரழிவை உருவாக்கி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.



இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் படுதீவிரமாக களமிறங்கி உள்ளன. இதில் ரஷ்யா அதிதீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்தியது. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என்று ரஷ்யா அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமது மகள்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் புதின் அறிவித்திருந்தார்.



உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்பு



இதனிடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்களது தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன; 100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் தர ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவித்துள்ளது.



மேலும் சர்வதேச சந்தைக்காக இந்த தடுப்பூசிக்கு Sputnik V (ஸ்புட்னிக்-V) எனவும் ரஷ்யா பெயரிட்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து தயாரித்துள்ளது.



எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!



முந்தைய சோவியத் யூனியனானது விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக். இதன்பிறகே உலக நாடுகளிடையே விண்வெளி பயணம் குறித்த போட்டியே உருவானது. தற்போது உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கும் அதே ஸ்புட்னிக்கின் பெயரை ரஷ்யா சூட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை