Skip to main content

30 அடியவர்களுடன் நடாத்தப்படும் நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த உட்சவம்....!

Jun 10, 2020 452 views Posted By : YarlSri TV
Image

30 அடியவர்களுடன் நடாத்தப்படும் நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த உட்சவம்....! 

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இவ்வருடவருடாந்த உற்சவத்தை நயினாதீவில்உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அன்னதானத்துக்கும் தடை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்



நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்



நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன்ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெறவுள்ளது குறித்த ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இவ்வருடம் நயினா தீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் கலந்து கொண்டு குறித்த உற்சவத்தில் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.



இம்முறை ஆலய மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது



 தற்போது நாட்டில் உள்ள கொரோனா தாக்க அச்சத்தின் காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றபடுவதாகவும் குறிப்பாக நயினாதீவு பகுதியானது தனிமையான ஒரு தீவாக இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் ஏனையபகுதியை சேர்ந்தவர்களை அனுமதிப்பதன் மூலம் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதன் காரணமாக இம்முறை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு நயினாதீவிலுள்ள அப்பகுதியைச் சேர்ந்த 30 அடியவர்கள் மட்டும் ஆலய திருவிழாவில் பங்குபற்ற முடியும்



 எனவே வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் குறித்த ஆலய உற்சவத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார் 



அத்தோடு யாழ்மாவட்டத்தில் இருப்பவர்களும் குறித்த ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள முடியாது எனவே இம்முறை ஆலய உற்சவத்திற்கு நயினாதீவு தவிர்ந்த வேறு எந்த இடங்கள் இருந்தும் பக்தர்கள் ஆலய உற்சவத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் 



 இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளிஇடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்



நாட்டில் சுகாதார திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றிஇம்மு முறை 30 பேருடன் மட்டுமே ஆலய உற்சவம் இடம்பெற உள்ளது அதிலும் தேர்,சப்பறஉற்சவங்கள் எதுவும் இடம்பெற மாட்டாது அத்தோடு ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளதாகவும் தெரிவித்தார் 



யாழ் மாவட்ட செயலகத்தில் நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவ தொடர்பான முன்னேற்பாட்டு  கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் குறித்த தீர்மானங்கள் சுகாதார பிரிவினராலும் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினாலும் குறித்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்



குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் வேலணைப் பிரதேச செயலர் மற்றும் கடற்படையினர் பொலிஸார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆலய நிர்வாகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை