Skip to main content

ஜனாதிபதி கோட்டாபயவின் போலி கையொப்பத்தின் பின்னணியில் பிரதமர் அலுவலகம்.....!

Jun 09, 2020 260 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி கோட்டாபயவின் போலி கையொப்பத்தின் பின்னணியில் பிரதமர் அலுவலகம்.....! 

ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்திய கடிதத்தின் பின்னணியில் பிரதமர் அலுவலத்தில் சேவையாற்றும் நபர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிமன்றுக்கு அறிவித்தது.



இது தொடர்பில் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சி.ஐ.டி நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியது.



ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்து, மீள தனது வேலையைப் பெற முயற்சித்ததாக கூறப்படும் குருணாகல், யந்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த பிரசன்ன அருண குமார எனும் நபர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.



இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை.



இந் நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்த சி.ஐ.டி.,



“இந்த சந்தேக நபர் இலங்கை வங்கியின் கடன் பிரிவிலேயே சேவையாற்றியுள்ளார். அதன் போது உரிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளாமல் மோசடியான முறையில் செயற்பட்டமைக்காக அவர் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.



அந்த பின்னனியிலேயே மீள பணியில் சேர ஜனாதிபதியின் கையொப்பத்தை போலியாக இட்டு கடிதம் ஒன்றினை தயார் செய்துள்ளார்.



இந் நடவடிக்கைகளில் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்து தற்போது விசாரித்து வருகின்றோம்.” என தெரிவித்தது.



இதன்படி சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.



ஜனாதிபதி கோட்டாபயவின் போலி கையொப்பத்தை தயாரிப்பதற்கு மஹிந்தவின் காரியாலயத்தில் இருக்கும் ஒருவர் தொடர்புபட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை