Skip to main content

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Jun 13, 2020 285 views Posted By : YarlSri TV
Image

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்குவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக இருந்ததை தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ரசிகர்கள் இன்றி இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரும் காலி மைதானத்தில் மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடக்க இருக்கிறது.இங்கிலாந்து போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இது தவிர 4 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த சோதனையில் எந்த வீரராவது தேறாமல் போனால் மாற்று வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். இங்கிலாந்துக்கு சென்ற பிறகு தேர்வாளர்கள் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியை இறுதி செய்வார்கள்.இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் பேட்ஸ்மேன் ஹைதர் அலிக்கு முதல்முறையாக தேசிய அணியில் கால்பதிக்கும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த உள்ளூர் போட்டித் தொடரில் 22 விக்கெட்டுகள் வீழ்த்திய 36 வயதான வேகப்பந்து வீச்சாளர் சோகைல் கான் 3 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டது விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் வெற்றிகரமாக செயல்பட வாய்ப்புள்ள பாகிஸ்தான் அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்து இருக்கின்றனர். மார்ச் மாதம் முதல் எந்தவித போட்டியிலும் நாங்கள் விளையாடாததால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் எங்களுக்கு சவாலானதாக இருக்கும். கொரோனா பாதிப்பு சூழலை எங்கள் வீரர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த சவாலை எதிர்கொள்ளும் அளவுக்கு மனரீதியாக வலுவாக இருக்கிறார்கள்’ என்றார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை