Skip to main content

கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு

Jun 12, 2020 286 views Posted By : YarlSri TV
Image

கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மூன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு 

ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதால், வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்காது என்றும், அப்படி செய்தால் வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும், டெபாசிட் செய்தவர்களையும் பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக் கடன் மாத தவணைத் தொகை வட்டி மீது வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ஆறு மாத சலுகை காலத்தில் கடன் தவணைகள் மீது வட்டி வசூலிக்கப்படுமா? அல்லது வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 3 நாட்களுக்குள் கூடி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை