இடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்
Jun 12, 2020 333 views Posted By : YarlSri TV
இடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்
பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார்.அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு போக இயலாமல் தவித்துக்கொண்டிருப்பதை டுவிட்டர் மூலம் தெரிந்து கொண்டார்.அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து தங்களுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்டுக்கு தொழிலாளர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.இந்த நிலையில், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் தவித்த போது, உதவிக்கரம் நீட்டி விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்டின் தாராள மனம், கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள நவ்ஜவான் யூனியன் என்ற தொண்டு நிறுவனத்தை பெரிதும் கவர்ந்தது.இதற்காக 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி அதன் மூலம் நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்க அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.இதை அந்த மாவட்ட கலெக்டர் சமர்த் வர்மா நேற்று தொடங்கி வைத்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago