Skip to main content

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள், தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைப்பதற்காக உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

Jun 11, 2020 290 views Posted By : YarlSri TV
Image

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள், தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைப்பதற்காக உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.  

 தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றியதில் தவறு இருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள், தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் அமைப்பதற்காக உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.  உதாரணமாக, அம்பட்டூர் என ஆங்கிலத்தில் இருப்பது அம்பத்தூர் என்றே இனி ஆங்கிலத்தில் எழுதுவது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊர் பெயர்கள் குறித்த கலெக்டர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசனைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தின் முடிவிற்கிணங்க முதல் கட்டமாக தமிழ், ஆங்கில உச்சரிப்புகளில் முற்றிலுமாக வேறுபாடுடைய ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இதனால் தமிழில் உள்ள ஊர் பெயர்களை ஆங்கிலத்திலும் அப்படியே அழைப்பதற்கான நடவடிக்கைகளை கலெக்டர் எடுக்கும்படி வருவாய்த்துறையை கேட்டுக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.தண்டையார்பேட்டை தற்போது ஆங்கிலத்தில், TONDIYARPET என்று உள்ளது. அது THANDAIYAARPETTAI என்று மாற்றப்பட்டுள்ளது. இதேபோல அம்பத்தூர் இதுவரை AMBATTUR என எழுதப்பட்டு வந்தது. இனி அது AMBATHTHOOR என மாற்றப்படுகிறது. இதேபோல தமிழகம் முழுவதும் பல ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறே ஆங்கில வரி வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளது.இதற்கு பலரும் வரவேற்றாலும் ட்விட்டர்வாசிகள் சிலர் வெளியிடப்பட்ட பெயர் மாற்றத்தில் தவறு இருப்பதாகவும், அதில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை