Skip to main content

வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Jun 06, 2020 320 views Posted By : YarlSri TV
Image

வீரமரணம் அடைந்த தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் வீரமரணம் அடைந்தார்.இந்நிலையில், ராணுவீரர்மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை