Skip to main content

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தினம் மிக எளிமையாக நடைபெற்றது!

Jun 06, 2020 244 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தினம் மிக எளிமையாக நடைபெற்றது! 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுற்றாடல் தின நிகழ்வானது மிக எளிமையாக மரம் நாட்டுதல் செயற்பாட்டுடன் நிறைவடைந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வருடாந்தம் சுற்றாடல் தின நிகழ்வானது மிக பெரிய அளவில் சாரணர்களினாலும் சுற்றாடல் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்வது வழமை. 



இம்முறை கொவிட் - 19  தொற்று காரணமாக  அமைதியான முறையில் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது. 



2020 ஆம் ஆண்டு சுற்றாடல் தின தொனிப்பொருளாக       



" இயற்கைக்கான தருணம்"



உயிர்ப்பல்வகைமையை ஏற்படுத்துவோம். எனும் தொனிப்பொருளில் அமைந்திருந்தது. 



கல்லூரியில் சமூக இடைவெளி சுகாதார நடைமுறையை பின்பற்றி குறிப்பிட்ட சிலரே நிகழ்வில் பங்கேற்க முடிந்தது. கல்லூரி அதிபர் உரையை தொடர்ந்து சாரணன் செல்வன் சங்கமனால் சுற்றாடல் தினம் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை