Skip to main content

வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வர வாய்ப்பு இல்லை வேளாண்மைத்துறை இயக்குனர் கூறியுள்ளார் .

Jun 03, 2020 250 views Posted By : YarlSri TV
Image

வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வர வாய்ப்பு இல்லை வேளாண்மைத்துறை இயக்குனர் கூறியுள்ளார் .  

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாநில வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பாலைவன வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை. 10 கோடி, 20 கோடி என கூட்டம், கூட்டமாக வந்து வட மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலைவன வெட்டுக்கிளிகளின் நகர்வுகளை கண்காணிக்க மத்திய அரசு ஜோத்பூரில் எச்சரிக்கை மையத்தை தொடங்கியுள்ளது. இதனுடன் நாங்கள் தினமும் தொடர்பு கொண்டு வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து கேட்டு வருகிறோம்.தென்னிந்தியாவிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு இல்லை. காற்றின் திசை கிழக்கு நோக்கி இருப்பதால் வெட்டுக்கிளிகள் பஞ்சாப், ஒடிசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. விந்திய மலைத்தொடர், மேற்கு தொடர்ச்சி மலைகளும் தமிழகத்துக்கு அரணாக இருக்கிறது. 250 வகையான உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன. இதனால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை. இவற்றில் 100-க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்துபவை.தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் அனைத்தும் நன்மை தருபவை தான். வெட்டுக்கிளிகள் தொடர்பாக விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என  கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை