Skip to main content

சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jun 03, 2020 324 views Posted By : YarlSri TV
Image

சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும்  ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிக்க வேண்டும். வாடிக்கையாளர்,பணியாளர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சலூன்,பியூட்டி பார்லர், ஸ்பா இயங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையம் மற்றும் ஸ்பா சில நிபந்தனைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இருந்த போதிலும் கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை என்பது 16 ஆயிரத்தை கடக்க உள்ளது. தமிழக அளவில் 184 ஆகவும் சென்னையில் 138 பேரும் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு என்பது மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு அறிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.இது தொடர்பாக ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அழகு நிலையம் மற்றும் ஸ்பா உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரையில், அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் நுழை வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது கைகளை சுத்தம் செய்வதற்கான சுத்திகரிப்பான் நுழை வாயிலில் வைக்க வேண்டும். சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிக்க வேண்டும்.வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கைகளை துடைக்க பேப்பர் நாப்கின் வைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட பின் அவற்றை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு அழகூட்டும் பணி, சேவையை துவங்குவதற்கு முன்னரும், சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பானை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அழகூட்டும் பணியினை, சேவையினை துவங்கும் முன்பும் செய்ய வேண்டும்.அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.

 அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி தங்களது மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.இருமல், காய்ச்சல் உள்ள பணியாளரை ஒவ்வொரு அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின்உரிமையாளர்கள் பணியில் அமர்த்தக் கூடாது.காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது, அழகு மற்றும் பிற சேவைகளுக்கு அழகு நிலையம், ஸ்பாக்களுக்கு வாடிக்கையாளரை அனுமதிக்க கூடாது. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தை காட்சி பலகை யில் வைக்கப்பட வேண்டும்.சமூக விலகலை பின்பற்றும் வகையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களில் ஒரே நேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்கும் பொருட்டு, இயன்றவரை, முன்பதிவு அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நேரம் ஒதுக்கி, அழகூட்டுதல் மற்றும் இதர சேவைகள் வழங்க வேண்டும். மேலும், அழகு நிலையம் ஸ்பாக்களில் உள்ள மொத்த இருக்கைகளும், 50 விழுக்காட்டிற்கு மேலான இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.அழகு நிலையம் மற்றும் ஸ்பாக்களின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

குளிர் சாதன இயந்திரங்கள் அல்லது காற்று குளிரூட்டும் இயந்திரங்கள் ஏற்கனவே இருப்பின் அவற்றை பயன்படுத்தக்கூடாது.நாற்காலிகள், கைப்பிடிகள், மேஜைகள், கதவின் கைப்பிடிகள், கண்ணாடிகள், மசாஜ் படுக்கைகள் மற்றும் இருக்கைகள், மேனி க்யூர், பெடி கியூர் மற்றும் சார் சிகிச்சை படுக்கைகள், மேஜைகள், ஸ்பா டிராலிகள், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட பொருட்களை கிருமி நாசினிகளான 1 சதவீதம் ஹைட்ரோ குளோரைட் கரைசல் அல்லது 2.5 சதவீதம் லைசால் கரைசலை கொண்டு ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் ஐந்து முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.தரைப்பகுதி சுத்தமாபராமரிக்கப்படுவதோடு, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு அழகூட்டும் சேவை உள்ளிட்ட இதர சேவைகள் முடித்த பின்னர், தரையில் விழும் முடி, நகம் மற்றும் பேப்பர் நாப்கின்களை அகற்றி 2.5 சதவீதம் கரைசலை கொண்டு தரைப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.சீப்பு, முடி நேராக்கும் இயந்திரம் உட்பட இயந்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் முன்னர் சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்பட்ட பிளேடினை மீண்டும் மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் பயன்படுத்தப்பட்ட பிளேடுகள் சுகாதார முறையில் அகற்றப்பட வேண்டும்.முடி மற்றும் இதர கழிவுகள், முகம் அழகூட்டல் மற்றும் இதர சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட நுரை, குழைமம் மற்றும் பேஸ் மேக் ஆகியவை சுகாதார முறையில் அகற்ற வேண்டும். களையக்கூடிய மேலங்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய மேலங்கி, டவல் மற்றும் தலைக்கட்டு பயன்படுத்தப்படும் நிகழ்வுகளில், அவை ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சலவை செய்த பின்னரே மற்றொரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்பட வேண்டும் வாடிக்கையாளர்களுக்கான அறிவுரையில், “அழகு நிலையம் மற்றும் ஸ்பாவிற்குள் நுழையும் முன்னரும், வெளியே செல்லும் முன்னரும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது சுத்திகரிப்பானை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.என்று கூறப்பட்டுள்ளது 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை