Skip to main content

ஜூன் மாதம் 8 ம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

Jun 02, 2020 265 views Posted By : YarlSri TV
Image

ஜூன் மாதம் 8 ம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் 

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள்  டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிக்கப் பட்டுள்ளதாக மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்



இன்றைய தினம் பண்ணையில் உள்ள சுகாதார கிராமத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்



வடமாகாணத்தில் பொதுவாக வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையின் பின்னரும் தென்மேற்க பருவப் பெயர்ச்சி மழையின் பின்னரும் டெங்கு நோயின் பரவலானது அதிகரிப்பது வழமை அதேபோன்று இந்த வருடத்தின் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் டெங்குநோய்  பரவுவது அதிகரித்து காணப்பட்டது அதன் பின்னர் அது படிப்படியாக குறைந்து காணப்பட்டது 



தற்போது கடந்த மாதம் பெய்த மழைக்குப் பின்னராக வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோய் பரம்பல்அதிகரித்து செல்வதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது யாழ் போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பல இடங்களிலிருந்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறநிலையினைஅவதானிக்கக்கூடியதாக இருக்கிறது 



இன்றுவரையான காலப்பகுதியில் இந்த வருடத்தில் 2 ஆயிரத்து இருநூறுக்கும் மேலான நோயாளர்கள் டெங்கு நோயின் தாக்கத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்கள்  இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கின்றது



 இந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டினை சுகாதாரபிரிவினர் மட்டும் தனித்து செயற்படுவதன் மூலம் கட்டுப்படுத்திவிட முடியாது இதிலே பல திணைக்களங்கள் நிறுவனங்கள் பொது மக்கள் அனைவரது பங்களிப்பும் இருந்தால் மட்டுமே தான் இந்த டெங்கு நோயினை வடக்கு மாகாணத்தில் முற்றாக கட்டுப்படுத்த முடியும் 



அந்த அடிப்படையில் யாழ்மாவட்டத்திலே ஜூன் முதல்வாரம் டெங்கு ஒழிப்பு வாரம் அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த வார காலப்பகுதியில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை தங்களுடைய சுற்றாடலினை துப்புரவு செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களினை கட்டுப்படுத்த முடியும் இந்த டெங்கு நோயிலிருந்துதங்களை பாதுகாக்க முடியும் அதே போன்று வேலைத்தளங்கள் பொது இடங்கள் பொதுமக்கள் சிரமதான அடிப்படையில் பணியாற்றி தங்களுடைய அலுவலகங்களில் பொது இடங்களினை துப்புரவாக்கி டெங்கு ஒழிப்பினை மேற்கொள்ள வேண்டும் 



இந்த டெங்கு நோயின் கட்ட பாட்டுக்காக மட்டுமன்றி  சுகாதார  நடவடிக்கையினைமேம்படுத்தும் முகமாக வட மாகாணம் முழுவதிலும் ஒவ்வொரு கிராம மட்டத்தில் கிராம மட்டசுகாதார மேம்பாட்டு க குழு ஒன்றினை ஆரம்பித்திருக்கிறோம் அந்தக் குழுவானது ஆரம்பிக்கப்பட்டு திறமையாக செயற்படும்போது சகல நோய்களுக்குமான கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்



அதாவது கிராம மட்ட சுகநல மேம்பாட்டுக்குழு அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய ஒவ்வொரு பிரதேசத்திலும் அந்தந்த பிரதேசத்தின் கிராமசேவையாளர் தலைவராகவும் செயலாளராக அந்தப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் நியமிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் மிகவும் சிறப்பாக செயல்படவுள்ளது 



அந்தக் குழுவிலே அப்பகுதியில் உள்ள அரசாங்க உத்தியோகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்டவர்கள் அந்த குழுவில் உள்ளடக்கப்பட்டு அந்த குழு திறமையாகச் செயற்படுமிடத்து சகல நோய்களுக்குமான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் வழங்கப்பட்டு நோய்களை கட்டுப்படுத்த முடியும் 



குறிப்பாக இந்த குறித்த செயற்பாட்டினை திறமையாகச் செயற்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் மட்டுமன்றி ஏனைய நோய்களையும் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் 



யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவும்வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கும் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்  அறிவிக்கப்படுகின்றது எதிர்வரும் ஜூன் மாதம் 8 ம் திகதி முதல் மூன்று நாட்கள் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிக்கப் பட்டுள்ளது மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவே அரசாங்க அதிபரின் வழிநடத்தலின் கீழ் சகல பிரதேச செயலாளர்களுக்கும் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் ஜூன் எட்டாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை