Skip to main content

வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

Jun 02, 2020 344 views Posted By : YarlSri TV
Image

வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை  

 அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூடி வந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 15 மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கலவர தடுப்பு போலீசார் மீது கற்களை எறிந்ததால் பரப்பபு நிலவியது.ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ஃபிளாஷ் பேங்க்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீசாரால் போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர்முக்கிய நகரங்கள் பல கலவரத்தால் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.1960 காலகட்டத்திற்கு பின்னர் இதுபோன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் கண்டதில்லை என சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தபோவதாக எச்சரித்து உள்ளார். இராணுவத்தை பயன்படுத்தி பரவலான வன்முறைகளைத் கட்டுப்படுத்தப்போவதாக டிரம்ப் கூறினார்.

இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

ஜார்ஜ் பிளாய்ட் கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். ஜனாதிபதியாக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை நமது பெரிய நாட்டையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதாகும். நமது தேசத்தின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன்.அதைத்தான் நான் செய்வேன்.ஒரு நகரம் அல்லது மாநில நிர்வாகம் தங்கள் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மறுத்தால், நான் அமெரிக்க இராணுவத்தை கொண்டு வருவேன். பிரச்சினையை விரைவாக தீர்ப்பேன் என கூறினார்.போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியதால் பென்டகன் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை