Skip to main content

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு 40 கோடி ரூபா இழப்பு…

Jun 04, 2020 334 views Posted By : YarlSri TV
Image

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு 40 கோடி ரூபா இழப்பு… 

கடந்த ஆட்சியில் புத்தளம் அறுவாக்காலு சுண்ணாம்பு கற்களை மோசடியாக குத்தகைக்கு வழங்கியதன் மூலம் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு 40 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போதைய நிருவாகம் குற்றச்சாட்டியுள்ளது.



(அறுவாக்காலு சுண்ணாம்பு கல் கடந்த ஆட்சியில் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் இருக்கும் வேளை குத்தகைக்குவிடப்பட்டதாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 5142 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த சுண்ணாம்பு கல் அடங்கிய காணி குத்தகைக்கு வழங்கப்படும் போது 5 வருடத்திற்கு ஒரு முறை குத்தகை கட்டணம் அதிகரிக்கப்படுவது பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு முரணாக மோசடியாக சுண்ணாம்பு கற்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டதால் கூட்டுத்தாபனத்திற்கு 40 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் அப்போதைய அமைச்சரான றிஷாட் பதியூதின் உள்ளிட்ட சிலருக்கு எதிராக முறையான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.)


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை