Skip to main content

வடகொரியாவில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

Jun 04, 2020 281 views Posted By : YarlSri TV
Image

வடகொரியாவில் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

கொரோனா வைரசின் பிடியில் இருந்து உலகம் எப்போது விடுபடும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் நீடிக்கிறது.சீனாவின் மத்திய நகரமான உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்த 6 மாத காலத்தில் உலகில் உள்ள 200 நாடுகளுக்கு பரவி கதிகலங்க வைத்து வருகிறது. உலகமெங்கும் 62¾ லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது.3¾ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கிறது. அமெரிக்காதான் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக இன்றளவும் நீடிக்கிறது. அங்கு 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.இந்தநிலையில் வட கொரியாவில், வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி துவக்கப்படும் கல்வியாண்டு, கொரோனா அச்சத்தால் 2 மாதங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முகக்கவசம் அணிந்து அங்குள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது.நீலம் மற்றும் வெள்ளை நிறம் ஆடைகளை அணிந்து  மாணவ-மாணவிகள் இன்று காலை தங்கள் பள்ளிகளுக்கு வந்தனர். அனைவரும் ஆடையில் சிவப்பு நிற பூக்கள் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்தனர். நீங்கள் உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என ஆசிரியர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை