Skip to main content

தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் அரசு நீடித்துள்ளது

Jun 04, 2020 299 views Posted By : YarlSri TV
Image

தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் அரசு நீடித்துள்ளது  

 தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை செயலாளராக தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சண்முகம் தலைமை செயலாளராக பதவியேற்றார். இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் 31ம் தேதியுடன் தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் முடிவடைய இருந்தது. அவருக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தது. இதையடுத்து அவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பு செயலாளர் தமிழக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று கடந்த மாதம் தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இது சம்பந்தமாக ஆய்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தமிழக தலைமை செயலாளர் 31.7.2020 ஓய்வு பெறும் காலத்தை, 1-8-2020 முதல் 31-10-2020 வரை மேலும் 3 மாதம் காலம் வரை நீட்டிப்பு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. இந்த நேரத்தில் தலைமை செயலாளரை மாற்றம் செய்தால், கொரோனா பணிகளை ஒருங்கிணைக்க முடியாது என்பதாலேயே, தமிழக தலைமை செயலாளர் சண்முகத்துக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், 1985ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். 2010ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலைமை செயலாளராகி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை