Skip to main content

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்..

Jun 03, 2020 270 views Posted By : YarlSri TV
Image

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள்.. 

கடந்த ஐந்து மாதங்களில் 19 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.



மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனேகமானோர் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால் நோய் மீண்டும் தலைதூக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கடந்த வருடம் டெங்கு நோயினால் 150 பேர் மரணமடைந்ததுடன், கொரோனா நோயை ஒழிப்பதை போன்றே டெங்கு நோயையும் ஒழிப்பதற்கு உரிய அவதானம் செலுத்த வேண்டுமென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை