Skip to main content

ட்விட்டர் நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

May 31, 2020 499 views Posted By : YarlSri TV
Image

ட்விட்டர் நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.  

ட்விட்டர் வெப் வெர்ஷனில் பயனர் எழுதும் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்விட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை சில க்ளிக்குகளில் மேற்கொள்ள முடியும்.முதற்கட்டமாக இரு அம்சங்களும் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. புதிய ஷெட்யூல் அம்சத்தில் ட்வீட் கம்போசர் அருகில் சிறிய காலெண்டர் ஐகான் எமோஜி பட்டன் அருகில் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ட்வீட் செய்யப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

முன்பை போன்றே, ட்வீட்களை எழுதும் போது பாதியில் நிறுத்த வேண்டியிருந்தால் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வழி செய்கிறது. முன்னதாக இந்த அம்சத்தை இயக்குவது கடினமாக இருந்தது. தற்சமயம் இதனை இயக்க புதிதாக இரண்டு டேப்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் சேமிக்கப்பட்ட ட்வீட்களும், மற்றொன்றில் ஷெட்யூல் செய்யப்பட்ட ட்விட்களும் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக இந்த அம்சம் ட்விட்டர் வெப் தளத்திலும் அதன்பின் மொபைல் வெப் தளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இரு அம்சங்களும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளிலும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை