Skip to main content

இந்தியா, சீனா போர் பதற்றத்துக்கிடைடில் வெளி நாடுகளில் இருக்கும் சீனர்களை தம் நாட்டிற்கு அழைத்து வர தீர்மானம்...!

May 31, 2020 297 views Posted By : YarlSri TV
Image

இந்தியா, சீனா போர் பதற்றத்துக்கிடைடில் வெளி நாடுகளில் இருக்கும் சீனர்களை தம் நாட்டிற்கு அழைத்து வர தீர்மானம்...!  

இந்தியாவில் இருக்கும் சீனர்களை விமானம் மூலம் மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



சீனாவில் இருக்கும் நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.



சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாட்டிற்குள் இடையில் உரசல் ஏற்பட தொடங்கி உள்ளது. அதேபோல் நேபாளம் எல்லையிலும் இதனால் மோதல் ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் சீனர்களை அவசரமாக விமானம் மூலம் சீன அரசு மீண்டும் தங்கள் நாட்டிற்கு மீட்டு செல்ல முடிவு செய்துள்ளது.



இதற்கான விவரங்களை சீன அரசு தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை இணையம் மற்றும் தூதரக பக்கத்தில் இதற்காக விவரம் வெளியிட்டுள்ளது.



இந்தியாவில் உள்ள சீனர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .



அதன்படி இந்தியாவில் இருக்கும் சீன பயணிகள், பணியாளர்கள், உணவகம் வைத்து இருக்கும் நபர்கள், வியாபாரிகள், மாணவர்கள் ஆகியோர் இந்த விமானம் மூலம் சீனாவிற்கு திரும்பலாம்.



அவசர தேவை உள்ள யாரும் சீனாவிற்கும் திரும்பலாம். இதற்காக உரிய கட்டணம் செலுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் ஏற்பாடு செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



அதோடு இவர்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதார நடவடிக்கை குறித்தும் சீனா விளக்கி உள்ளது.



கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே இப்படி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.



மேலும் சீன அரசு ஏற்பாடு செய்துள்ள தனிமை முகாமில் சில நாட்கள் தங்க ஏற்றுக்கொள்ளும் நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை