Skip to main content

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

May 31, 2020 311 views Posted By : YarlSri TV
Image

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.  

நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது. கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.நாசாவின் இரண்டு வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே விண்ணுக்கு சென்றவர்கள்.  இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் விண்வெளி மையத்தில் முக்கியமான ஆராய்ச்சிகளை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை