Skip to main content

இயக்குனர் ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது

May 30, 2020 306 views Posted By : YarlSri TV
Image

இயக்குனர் ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது 

கீரிடம்படத்தின்மூலம்தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.இயக்குனர் ஏ. எல். விஜய் அதனையடுத்து மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார்.அதனையடுத்து 2014ல் நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.



அதன் பின் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியிருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விஜய்யின் சகோதரரான உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தான் பெரியப்பா ஆனதாகவும், இன்று காலை 11.25க்கு தனது சகோதரரான விஜய் மற்றும் ஐஸ்வர்யா விஜய் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தம்பதியிருக்கு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை