Skip to main content

ஆயுதத்தில் அசுர வளர்ச்சி அடைந்த அமெரிக்கா.....!

May 24, 2020 350 views Posted By : YarlSri TV
Image

ஆயுதத்தில் அசுர வளர்ச்சி அடைந்த அமெரிக்கா.....! 

அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



அமெரிக்கா அணு ஆயுத சோதனை செய்வதற்கான திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் அண்மைய நாட்களாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.



அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது. பசிபிக் கடலில் அமெரிக்கா கடற்படை மூலம் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.



ரோந்து பணிகளை மேற்கொள்ளும் பிற நாட்டு ட்ரோன் விமானங்கள், தாழ்வாக பறக்கும் விமானங்களை தாக்கி அழிக்கும் ஆயுதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.



லேசர் கதிர்களை விமானம் மீது செலுத்தி அதை நொடியில் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டதாகும். அமெரிக்காவிடம் ஏற்கனவே லேசர் ஆயுதங்கள் இது போல உள்ளது.



இது அதன் அதி நவீன வகை என்று கூறுகிறார்கள்.சோதனையை மிகவும் ரகசியமாக நடத்தி இருக்கிறார்கள்.



பசிபிக் கடலில் குறிப்பாக எங்கு சோதனை நடந்தது என்று கூறப்படவில்லை. கடந்த மே 16ம் திகதியே இந்த சோதனையை நடத்திவிட்டனர். ஆனால் அப்போது இதை பற்றி தகவல் வெளியாகவில்லை.



கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து இன்றுதான் இதை பற்றி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அமெரிக்க கடல் எல்லையில் பிற உளவு விமானங்கள் வருவதை தடுக்க இதை களமிறக்கி உள்ளனர்.



இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் செயல்பட கூடிய தன்னிச்சையாக இயங்கும் லேசர் ஆயுதம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்தது.



வானில் பறக்கும் விஷயங்களை குறி வைத்து, அதி வேகமாக செயல்பட்டு அதை கண்ணிமைக்கும் நேரத்தில் இது தாக்கி அழிக்கும் என்று கூறுகிறார்கள். இது திட நிலையில் இருக்கும் லேசர் ஆகும்.



Solid State Laser Weapons System Demonstrator என்று இதை அழைக்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்க கடற்படை புதிய பலம் பெற்றுள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு முன் இருந்த லேசர் ஆயுதங்களை விட இது மிக அதிக வலிமை வாய்ந்தது.



அமெரிக்காவின் இந்த அசுர வளர்ச்சி மற்றைய நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



குறிப்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுவரும் முறுகல் நிலையில், தற்போது இது இன்னொரு அத்தியாயமாக மாறும் என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை