Skip to main content

ஊரடங்கு விதிகளை மீறி மக்கள் ஜாகிங் போவது மற்றும் சைக்கிளில் சுற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

May 28, 2020 320 views Posted By : YarlSri TV
Image

ஊரடங்கு விதிகளை மீறி மக்கள் ஜாகிங் போவது மற்றும் சைக்கிளில் சுற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட்டியம், குஜராத், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், டெல்லி ஆகியவை அதிக இலக்காகி உள்ளன.  இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.எனினும், பலர் அதுபற்றிய அச்சம் எதுவுமின்றி, விதிகளை மீறி வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.  அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதேபோன்று, டெல்லி இந்தியா கேட் அருகே கொரோனா பாதிப்பு பற்றிய அச்சம் சிறிதுமின்றி, ஊரடங்கு விதிகளை மீறி மக்கள் ஜாகிங் போவது மற்றும் சைக்கிளில் சுற்றி வருவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதனை பயன்படுத்தி கொண்டு மக்கள் காலையிலேயே கும்பலாக நடைபயிற்சி செய்வது, ஜாகிங் போவது மற்றும் சைக்கிளில் சுற்றி வருவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.ஊரடங்கு அமலான நிலையில், முக கவசங்கள் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அதுபற்றி கவலை கொள்ளாமல் டெல்லியில் மக்கள் நடந்து கொள்வது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை