Skip to main content

22 வயது இளம் நடிகை கார் விபத்தில் பலியானார்

May 28, 2020 293 views Posted By : YarlSri TV
Image

22 வயது இளம் நடிகை கார் விபத்தில் பலியானார்  

கர்நாடக மாநிலம் மடிக்கேரி பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கேல். அவருக்கு வயது 22. மாடலாக கலையுலகில் அறிமுகமான இவர் கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானார். கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பெங்களூருவில் வசித்து வந்தார். 



 



இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை பெங்களூருவில் இருந்து நடிகை மெபினா தனது தோழிகளுடன் சொந்த ஊரான மடிக்கேரிக்கு காரில் சென்றுள்ளார். தேவிஹள்ளி பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் மெபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தோழிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை