Skip to main content

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ்

May 28, 2020 332 views Posted By : YarlSri TV
Image

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் இணைய தளத்தில் நாளை ரிலீஸ் 

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்த்தனர். ‘’பொன்மகள் வந்தாள் படத்தை ‘ஒடிடி’ தளத்தில் வெளியிட்டால் இனி அவர்கள் தயாரிக்கும் படங்களையும் சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட அவர்கள் தொடர்புடைய படங்களையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம்‘’ என்றும் எச்சரித்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிகா படத்தை இணைய தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி பொன்மகள் வந்தாள் படம் நாளை (29-ந்தேதி) இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த பிரச்சினை குறித்து ஜோதிகா கூறும்போது, ‘’கொரோனாவால் மட்டுமே இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம். கொரோனா பிரச்சினை முடிந்ததும், நிறைய கதாநாயகர்கள் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாக காத்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடுவதற்கு 2 வருடங்கள் ஆகி விடும். அதனால்தான் இணைய தளத்தில் வெளியிடுகிறோம்‘’ என்றார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை