Skip to main content

போருக்கு தயாராக இதுக்கும் சீனா; சீனா அதிபர் எச்சரிக்கை....!

May 27, 2020 403 views Posted By : YarlSri TV
Image

போருக்கு தயாராக இதுக்கும் சீனா; சீனா அதிபர் எச்சரிக்கை....! 

தற்போதுள்ள சூழ்நிலையில், இராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.



லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சீன அதிபரும் தற்போது இவ்வாறு உத்தரவிட்டிருக்கிறார்.



தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.



முன்னதாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கொரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வருகிறது.



இந் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



இதனையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு அமையலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் இராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தகவல் வெளியிட்டுள்ளது.



சீன இராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும், எந்த ஒரு மோசமான சூழலுக்கும் இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை