டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் 2 திரைப்படங்கள் படங்கள்
May 25, 2020 270 views Posted By : YarlSri TV
டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் 2 திரைப்படங்கள் படங்கள்
கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளத்தில் வெளியிடும் முயற்சியில் சில தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழில் தயாரான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணையதளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்தியில் உருவான விர்ஜின் பானுப்ரியா. தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாரான கிளைமேக்ஸ் ஆகிய மேலும் 2 படங்கள் இணையதளத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது.இதுகுறித்து விர்ஜின் பானுப்ரியா படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரா தாரிவால் கூறும்போது, “தியேட்டர்களை மீண்டும் திறப்பதில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது. தியேட்டர்களுக்காக இனிமேல் காத்திருக்கவும் முடியாது எனவேதான் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேசி வருகிறோம்” என்றார். இந்த படத்தில் ஊர்வசி ரவ்தெலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கில் அமலாபால் வேடத்தில் நடித்துள்ளார். கிளைமேக்ஸ் படத்தில் ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். கிளுகிளு காட்சிகள் நிறைந்த திகில் படமாக தயாராகி உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago