Skip to main content

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியது.

May 21, 2020 348 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியது. 

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 5609 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால்  இதுவரை 3435 பேர் உயிரிழந்த நிலையில், 45,300 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1390 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10318 பேர்  குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 13,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5882 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 12,537 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 749 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5219 பேர் குணமடைந்துள்ளனர்.  


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை