புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
May 20, 2020 273 views Posted By : YarlSri TV
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணியாற்றி வந்தனர். கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 31ம்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். வழியில் மேற்கு வங்கத்தில் இருந்து பீகார் நோக்கி வந்த லாரியை மறித்து அதில் தங்கள் சைக்கிள் மற்றும் உடமைகளை ஏற்றிக்கொண்டு தாங்களும் புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் ஆம்போ சவுக் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் பிரேக் போட்டதால் லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி டிரைவர், கிளினீர் தப்பியோடினர். பஸ்சில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களிடம் இருந்த ஆவணங்கள் மூலம் அவர்கள் பீகார் மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago