Skip to main content

தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்

May 20, 2020 325 views Posted By : YarlSri TV
Image

தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில்“தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் 



சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஆறு தசாப்த காலத்தில் 1,46, 000 தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்.. இந்த நினைவு தினத்தில் மரணமான தமிழர்களை நாம் கௌரவிக்கும் அதேவேளை, அவர்களின் நீதிக்கும், சுதந்திரத்துக்கும், இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்குமான அவர்களுடைய போராட்டத்துக்கு நாம் துணைநிற்போம்.



இலங்கையில் நடைபெற்ற இந்தப் போரின் போது போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை ஐ.நா. முன்னெடுத்த விசாரணைகள் உறுதிப்படுத்தியிருந்தது.



ஆனால், இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இதுவரையில் நீதிப்பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவும் இல்லை, இதில் சம்பந்தப்பட்ட யாரும் இதுவரையில் நீதியின் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தப்படவும் இல்லை.



ஆனால், அண்மையில் ஒரு சிறுவன் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்தமைக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவரை இலங்கை அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தது. கடந்த மாதத்தில்தான் இவர் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டார். இது நீதிக்கு எதிரான ஒரு குற்றம்.



இலங்கையில் தமிழர்கள் ஒடுக்குமுறைகளால், மனித உரிமை மீறல்களளால் தொடர்ந்தும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளர்கள். தமிழர்களிடமிருந்து அகரிக்கப்பட்ட காணிகள் இதுவரையில் அவர்களிடம் மீளக்கொடுக்கப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழில் பாடமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 200 பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளனர். தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ந்தும் அடக்கப்படுவதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.



தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களுக்கான நீதியையும், இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை