Skip to main content

மே 21ம் தேதி பொன்மகள் வந்தாள் பட ட்ரைலர் ரிலீஸ் என சூர்யா அறிவித்துள்ளார்

May 20, 2020 367 views Posted By : YarlSri TV
Image

மே 21ம் தேதி பொன்மகள் வந்தாள் பட ட்ரைலர் ரிலீஸ் என சூர்யா அறிவித்துள்ளார்  

ஜோதிகா கடைசியாக தம்பி படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். அந்த படத்தினை தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக புது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு அதை நேரடியாக OTT இணையத்தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை துவங்கியது. ஒரு நல்ல தொகைக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் அதை வாங்கிய நிலையில், மே 29ம் தேதி நேரடி OTT ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.



பொன்மகள் வந்தாள் நேரடி ஆன்லைன் ரிலீசுக்கு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எச்சரிக்கையை மீறி OTTயில் ரிலீஸ் செய்தால், இனி ஜோதிகா, சூர்யா தரப்பு படங்கள் எதையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யமாட்டோம் என எச்சரித்தனர். இதையும் தாண்டி தான் இது அமேசானில் ரிலீஸ் ஆகிறது பொன்மகள் வந்தாள்.



இந்நிலையில் தற்போது மே 21ம் தேதி பொன்மகள் வந்தால் பட ட்ரெய்லர் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்துள்ளார். இந்த படம் நீதித்துறை பற்றியது என்பதால் Delay in Justice is Injustice என சூர்யா தனது ட்விட்டில் கூறியுள்ளார்


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை