Skip to main content

குப்பை மேனி இலையின் மருத்துவ குணங்கள்

May 20, 2020 294 views Posted By : YarlSri TV
Image

குப்பை மேனி இலையின் மருத்துவ குணங்கள்  

தேவையான பொருட்கள்: இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்த ஓட்டம் சீராகும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது.  தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.



தேவையான பொருட்கள்: குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு  பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டையை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.



அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டை ஆகியவற்றை துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள், புங்க எண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பட்டைகள் பச்சையாக இருக்கும்போது இடித்து பசையாக்கி பாதவெடிப்பு உள்ள இடத்தில் கட்டிவைத்தால் வெடிப்பு சரியாகும்.  சாலையோரங்களில் வெயிலுக்காக வளர்க்கப்படும் மரம் புங்கன். இது மருத்துவ குணங்களை உடையது. அத்தி மரத்தின் பாகங்கள் பல்வேறு நன்மைகளை கொண்டவை. அத்தி பழம் உணவாக பயன்படுகிறது. அத்தி பால் மருந்தாகிறது.



அத்திமரப்பட்டை பாதவெடிப்பை சரிசெய்கிறது. மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும். வெடிப்பு மாறி தோல் மென்மையாகிறது. பாதம் அழகு பெறும். சுண்ணாம்பு பாதவெடிப்புக்கு மருந்தாகிறது. பாதவெடிப்புக்கான இந்த  மருந்துகளை பயன்படுத்தும் முன்பு இளம்சூட்டில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். இதையடுத்து மேல்பூச்சு மருந்துகளை போடும்போது நல்ல பலன் தரும்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை